ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் குட்பேட் அக்லி இந்த திரைப்படம் நேற்று ஏப்ரல் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இப்படிதான் அஜித்தை காண ஆவலுடன் இருக்கிறோம் என பல ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்களை இணையதளத்தில் பதிவிட்டார்கள்.
அஜித் குமாரின் தீவிர ரசிகர் தான் ஆதிக் ரவிச்சந்திரன் அதனால் அஜித்தை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு படத்தை செதுக்கியுள்ளார் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் தான் இந்த திரைப்படம். மொத்த திரைப்படத்திலும் அஜித்துக்கான பில்டப் காட்சிகள் தாங்கி நிற்கிறது.
படத்தின் நாயகன் அஜித் என்றால் மற்றொரு நாயகன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் உடன் இணைந்துள்ளதால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பின்னணி இசை அஜித்திற்கு மாஸ் காட்டும் இசை என அனைத்திலும் பட்டையை கிளப்பி விட்டார்.
தமிழ்நாடு கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா என இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது இலங்கை மற்றும் மலேசியாவில் காலை 6 மணி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 1000 திரையரங்குக்கு மேல் இந்த திரைப்படம் வெளியானது திரையரங்கில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் தான் சென்று கொண்டிருக்கிறது.
அதேபோல் இந்த திரைப்படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 28.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் எனவும் கூறுகிறார்கள் பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் இதுவரை பட குழுவில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியிடவில்லை.