சினிமா உலகில் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் படத்தில் நடிக்கும் நடிகர் அந்த படக்குழுவுக்கு பரிசீலித்து அழகு பார்ப்பார்கள். மேலும் இயக்குனர்கள் விலையுயர்ந்த ஒரு பொருளை தருவதை நடிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்காக நடிகர் அல்லு அர்ஜுன்.
12 பேருக்கு நகைகளையும் பணத்தையும் வழங்கினார். அவரைப் போலவே அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் அண்ணாத்த இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்ததாக கூறினார்.
மேலும் சிவாவை தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து சொல்லி தங்க செயின் ஒன்றை பரிசு அளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்த செய்தி சமூக வலைதள பக்கங்களில் வைரலானது இதை அண்மையில் மாநாடு திரைப்படத்தில் நடித்த வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி இந்த செய்தியை அறிந்துகொண்டார்.
பின் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கூறுவது சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக வெங்கட் பிரபுவுக்கும் தங்கச் செயின் ஒன்றை பரிசளியுங்கள் என பிரேம்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுவும் நடிகர் சிம்புவுக்கு அவர் மறைமுகமாக இந்த கோரிக்கையை வைத்துள்ளார். இந்த செய்தியை தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் பிரேம்ஜி நீங்க வேற லெவல் எனக்கூறி சிறப்பான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.