தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். சின்னத்திரை நடிகைகளை நாள்தோறும் பார்ப்பதனால் என்னவோ இவர்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு தான்.
அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை இயக்குவதோடு கவர்ச்சியில் ஆர்வமுள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு புதிதாக அறிமுகமாகும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்றவற்றை செய்து எப்படியாவது ரசிகர்களை வளைத்துப் போட்டு விடுகிறார்கள்.
பொதுவாக வெள்ளி பெரிய நடிகை என்றால் குறைந்தது 5 திரைப்படங்களில் நடித்திருந்தால் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆவார்கள். ஆனால் சின்னத்திரை நடிகைகள் அப்படி கிடையாது அறிமுகமான தனது முதல் சீனிலேயே பிரபலம் அடைந்து விடுவார்கள்.
அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஆஷா கௌடா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக மாடலாக பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் இவருக்கு கோகுலத்தில் சீதை சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது இவரின் சிறந்த நடிப்பின் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். எப்படிப்பட்ட இவர் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பிரண்டிங்கான பாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் Dreamum wakeupum பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.