ரம்யா பாண்டியன் நடித்துள்ள அன்பிற்கினியான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

ramya-pandian

தமிழ் சினிமாவில் அப்பா மகள் பற்றிய திரைப்படங்கள் பல உண்டு ஆனால் அப்பா மகள் திகில் திரைப்படம் என்னவென்றால் அது அன்பிற்கினியால் என்ற திரைப்படம்தான்.

அதிலும் உண்மையான அப்பா மகள் அருண்பாண்டியன் அவருடைய மகள் ரம்யா பாண்டியன் இவர்கள் இணைந்து நடித்துள்ள இத் திரைப்படமானது ரசிகர் மத்தியில் மிகவும் எதிர் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை கோகுல் அவர்கள் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதை மற்றும் காட்சிகளும் புதிய கோணத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ramya pandiyan
ramya pandiyan

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தற்போது இதற்கு “அன்பிற்கினியால்” என்ற தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ramya pandiyan

இந்த படம் அப்பா மகள் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு திரையின் முன் ஒரு எமோஷனலான திரில்லர் விருந்து காத்திருக்கிறது.  இத் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.