விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஏற்கனவே ராதிகா பாக்யா மீது கோபமாக உள்ளதால் அவர் மீது ஏதாவது ஒரு கம்ப்ளைன்ட் கிடைத்தால் போதும் உண்டு இல்லை என பார்த்து விடலாம் எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் பாக்யாவை அழைத்து இன்னும் வெறுப்பேத்தி அனுப்புகிறார். இதனால் கோவம் அடைந்த பாக்யா கோடீஸ்வரன் சாரிடம் கம்ப்ளைன்ட் செய்து விடுகிறார். இதனால் கோடீஸ்வரன் சார் ராதிகாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். இந்த விஷயம் பாக்கியா குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதனால் ராதிகாவை உண்டு இல்லை என பார்த்து விடுகிறேன் என ஈஸ்வரி கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் ராதிகா வீட்டிற்கு வருகிறார் சமையல் கட்டில் பாத்திரம் கீழே விழுவதால் கடுப்பான ஈஸ்வரி ராதிகாவிடம் உனக்கு என்ன அவ்வளவு திமிரு எனக் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாக்கியா தான் பெஸ்ட் நீ எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. பாக்கியாக்காக கோபியையே இந்த குடும்பமே எதிர்த்தது நீ எல்லாம் சும்மா பார்த்து நடந்துக்கோ என கூறிக் கொண்டிருக்கும் பொழுது கோபி உள்ளே வருகிறார்.
அந்த சமயத்தில் ராதிகா வாங்க கோபி வந்து கேளுங்க கோபி என கூற ஈஸ்வரி இவ்வள ஒழுங்கா இருந்துக்க சொல்லு தேவையில்லாம பாக்கியா விஷயத்துல தலையிட வேணாம் எனக் கூற கோபி உடனே நீ செய்தது தான் தப்பு ராதிகா உன் வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தான ஏன் தேவை இல்லாமா அடுத்தவங்க வேலையில மூக்கை நுழைக்கிற அமைதியா இருந்தா இரு இல்லன்னா போ, நாம வரதுக்கு முன்னாடி இந்த குடும்பம் அவ்வளவு அமைதியா இருந்துச்சு நாம வந்து டெய்லியும் பிரச்சனைதான் என குடும்பத்தார் முன்னிலையில் கோபி கூறிவிடுகிறார்.
ராதிகா மாடிக்கு சென்று விடுகிறார் பின்பு ஈஸ்வரி பாக்யா, எழில் அமிர்தா, ஜெனி செழியன் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செழியன் அப்பா சொல்வது போல் இவங்க வருவதற்கு முன்னாடி குடும்பம் அமைதியாக தான் இருந்துச்சு இப்பதான் இது போல இருக்கு எனக் கூற, ஈஸ்வரி வெளிய போனாலே என்ன பிரச்சனைன்னு கேக்குறாங்க ஒரே அசிங்கமா இருக்கு எனக்கு கூறுகிறார்.
அடுத்த காட்சியில் ராதிகா கோபியிடம் உங்க குடும்பத்தார் முன்னிலையில் என்னை அசிங்கப்படுத்துறீங்களா எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தா பாக்யாவுக்கு சப்போர்ட் பண்றீங்க என கேட்க உடனே கோபி நீ எதுக்கு தேவையில்லாம அடுத்தவங்க விஷயத்துல தலையிடுற தேவையில்லாம நீ ஏன் பேசுற நீ பாட்டுக்கு உன் வேலையை பார்க்க வேண்டியது தானே உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும் நீ வந்த மறுபடியும் தான் எல்லா பிரச்சனையும், ஒன்னு ஒழுங்கா இருந்தா இரு இல்லனா கிளம்பு என கோபி கூறி விடுகிறார்.
உடனே ராதிகா கண்கலங்கியபடி நான் இங்க இருக்கிறதால்தான் உங்களுக்கு சந்தோஷமே இல்லை நான் போகணுமா என கண்கலங்கியபடி வீட்டை விட்டு செல்கிறார். அந்த சமயத்தில் இங்கே என்ன அப்படி பார்க்கிற கண்ணு ரெண்டும் விழுந்திட போகுது என ஈஸ்வரி கூறுகிறார். ராதிகா தன்னுடைய அம்மா இருக்கும் வீட்டிற்கு செல்கிறார் அங்கு நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.