அவசரப்பட்டு சொல்லிட்டேன்.. கோட் படத்தை பார்த்து வெங்கட் பிரபுவிடம் நடிகர் விஜய் சொன்ன விமர்சனம்..

தளபதி விஜய் தற்பொழுது 68வது திரைப்படமாக கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் தான் இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் நல்லபடியாக வந்துள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா, என பல இடங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மூன்றாவது சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் தளபதி விஜய் தன்னுடைய சினிமா ஓய்வை அறிவித்து விட்டார். அப்படி இருக்கும் நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தை விஜய் சமீபத்தில் பார்த்துள்ளார் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தையும் வெங்கட் பிரபு அவர்களிடம் கூறியுள்ளார்.

தளபதி விஜய் கூறியதாவது கலக்கிட்ட அவசரப்பட்டு நான் சினிமா ஓய்வை அறிவித்து விட்டேன் இன்னொரு படம் உன் கூட பண்ணி இருக்கலாம் என கூறியுள்ளாராம் இந்த கமெண்ட்டை கேட்டு படக்குழு அனைவரும் உற்சாகத்தில் குஷியில் இருக்கிறார்களாம்.