அடடே இரண்டாம் பாதி இவ்வளவு நீளமா.? கோட் திரைப்படத்தின் முழு ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.?

வெங்கட் பிரபு இயக்கத்தில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி உள்ளன அனைத்து திரைப்படங்களும் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படிதான் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா மகன் என டபுள் ரோலில் நடித்துள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியானது அதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் இருந்து வருகிறது.

வழக்கமாக விஜய் திரைப்படம் என்றாலே இசை வெளியீட்டு விழா இருக்கும் அதில் விஜய் குட்டி ஸ்டோரி கூறுவார். அது மக்கள் மத்தியில் வைரலாகும் அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு குட்டி ஸ்டோரி எதுவும் இருக்காது என்பதுதான் ரசிகர்களின் வருத்தமான செய்தி.

அப்படி இருக்கும் நிலையில் கோட் திரைப்படத்தின் ரன் டைம் பற்றிய விவரங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மொத்த திரைப்படமும் மூன்று மணி நேரத்திற்கும் சில நொடிகள் மட்டுமே குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 27 நிமிடமும்.

இரண்டாம் பாதியில் ஒரு மணி நேரமும் 33 நிமிடமும் இருக்கிறதாம்.

Exit mobile version