தளபதி vs இளைய தளபதி மிரட்டினாரா விஜய்.! கோட் திரைவிமர்சனம்

goat movie review
goat movie review

goat movie review : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா லைலா, மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் இன்று உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பல வருடங்கள் பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததா என்பதை இங்கே காணலாம்.

படத்தைப் பற்றிய கதை: தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் காந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஆஜ்மல் ஆகிய நான்கு பேரும் சீக்ரெட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தலைமை அதிகாரியாக தான் ஜெயராம் நடித்து வருகிறார்.

இவர்கள் ஒரு மிஷனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது மோகன் தன்னுடைய குடும்பத்தை பாதித்து இழக்கிறார். மறுபுறம் தாய்லாந்தில் மற்றொரு மிஷனுக்காக விஜய் செல்கிறார் ஆனால் அங்கு செல்லும்பொழுது மனைவி மற்றும் மகனையும் அழைத்துச் செல்கிறார் அங்குதான் பிரச்சனை வெடிக்கிறது.

இதில் விஜயின் மகன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறான் இதனால் சீக்ரெட் வேலையில் இருந்து வெளியேறும் விஜய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடக்கிறது. அதன் பிறகு மீண்டும் ஸ்குவாட்டில் இணையும் விஜய்க்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது இதனை எப்படி விஜய் சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் தந்தை மகன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி உள்ளார் அதிலும் மகன் கதாபாத்திரம் வேற லெவல் அதகளம் பண்ணியுள்ளார் கலாட்டா, காமெடி, ஆக்சன், எமோஷன் நகைச்சுவை என மகன் கதாபாத்திரம் அமைய இளையதலபதியாக மிரட்டியுள்ளார்.

அதேபோல் விஜய்க்கு இணையாக பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, ஆகியோர்களும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் அதேபோல் அஜ்மஹால் ஜெயராம், பிரேம்ஜி ஆகியோர்களுக்கு குறைந்த காட்சிகள் என்றாலும் அதனை பக்காவாக நிறைவு செய்துள்ளார்கள். ஆனால் மீனாட்சி சவுத்ரி பெரிதாக கவரவில்லை.

காலங்காலமாக எடுக்கப்பட்ட கதை என்றாலும் இந்த கதையை வைத்து வெங்கட் பிரபு படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ ரோல் திரையரங்கில் கைத்தட்டளை அள்ளியுள்ளது. அதிலும் கேப்டன் விஜயகாந்தின் இன்று திரையரங்கை அதிர செய்துள்ளது. டி ஏ ஜிங் மற்றும் ஏ ஐ தொழில் நுட்பங்கள் சில இடங்களில் சொதப்பினாலும் இதை செய்த வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள் என பலரும் கூறுகிறார்கள்.

முதல் பாதி சிறிது தோய்வு இருந்தாலும் இரண்டாவது பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் செல்கிறது குறிப்பாக கடைசி 40 நிமிடங்கள் திரையரங்கை தெறிக்க விட்டுள்ளார் அதிலும் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் விஜய் கலக்கியுள்ளார் தளபதி வி எஸ் இளைய தளபதி வெறித்தனமாக இருந்தது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் மற்றொரு ஹீரோ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான்.

பின்னணி இசை ஒலிப்பதிவு எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. முதல் பாதியில் ஏற்பட்ட தொய்வு இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு..