கோட் திரைப்படத்தில் இந்த நடிகையா.? ஆத்தாடி இவர.. இவர வேற ராசி இல்லா நடிகைன்னு சொல்லுவாங்களே

நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் கோட் படத்திற்காக காத்து வருகின்றனர். ஏனென்றால் விஜய் மிக விரைவில் முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கிறார் எனவே இவருடைய கடைசி படங்களுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

கோட் படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வர மறுபுறம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் குறித்து தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகுவது வழக்கமாக உள்ளது. அப்படி விஜய் ரசிகர்கள் தங்களது பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் கோட் படம் டைம் டிராவல் பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் விஜயகாந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அப்படி கோட் படத்தின் மூன்றாவது பாடலை சுருதிஹாசன் பாடியிருக்கிறார் என்றும் விரைவில் அந்த பாடல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. எனவே இதனால் விஜய் ரசிகர்கள் கோட் படத்தில் சுருதிஹாசனும் வந்துவிட்டாரா என ஆச்சரியப்படுகின்றனர்.