GOAT : முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த் பிரபுதேவா அஜ்மல் அமீர் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்தது செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது இப்படி தொடர்ந்து போஸ்டர்கள் வெளியாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள் இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து பாடல் வெளியாக இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது இந்த பாடலை விஜய் பாடி இருக்கலாம் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது அதேபோல் இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா.
இவர் ஏற்கனவே வெள்ளி திரையில் அஜித், மாதவன் ஆகியவருடன் நடித்துள்ளார் அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்திலும் நடிகை கனிகா நடித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு கனிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.