6 நாளில் வசூலில் புதிய கோட்டையை கட்டிய விஜயின் கோட்.. மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா.?

தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்திருந்த திரைப்படம் கோட் இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது தமிழகத்தை தாண்டி பல இடங்களில் தளபதி விஜயின் திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை நானூறு கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இதில் விஜயின் சம்பளம் மட்டுமே 200 கோடி என கூறுகிறார்கள். முதல் நாளிலேயே 126 கோடி வசூலில் அமோகமாக தொடங்கியது.

படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, சினேகா, லைலா, பிரசாந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படமாக அமைந்து வருகிறது.

சில இடங்களில் கலவையான விமர்சனங்கள் குறித்து வெங்கட் பிரபு பேசியிருந்தார் அவர் கூறுவது ஏதாவது விமர்சனம் செய்வது அவர்களின் கடமை உரிமை ஆனால் கதை பற்றியும் ஜானர் குறித்தும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகிய கோட் திரைப்படம் ஆறு நாட்கள் முடிவில் உலக அளவில் 312 கோடி வரை வசூல் செய்துள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் 400 கோடியை  தொட்டு விடும் என பலரும் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.