நான்கு நாளில் வசூல் மன்னன் என நிரூபித்த விஜய்.. கோட் வசூல் நிலவரம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் goat இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது இதன் வசூல் விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்ற வகையில் படங்களை மக்களுக்கு கொடுத்து வந்தார் அதிலும் வெங்கட் பிரபு படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் முதன் முதலாக தளபதி விஜய்யை வைத்து கோட் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்தது.

அதேபோல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கோட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என 90 s கிட்ஸ் பலரும் நடித்திருந்தார்கள்.

படத்தின் முதல் நாளே ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது என்ன வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் உலக அளவில் நான்கு நாட்கள் முடிவில் 275 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

அதே போல் இனி வரும் நாட்கள் கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.