பொய் மேல பொய் சொல்லும் சின்மயி.! வைரமுத்து மகன் கார்க்கி அதிரடி.! இருவரையும் விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.?

chinmyi

தமிழ் சினிமாவில் சிறப்பாக பாடலை பாடி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சின்மயி. இப்படி வலம் வந்து கொண்டு இருந்தாலும் சமீபகாலமாக கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார்களையும் அடுக்கடுக்காக வைத்து வருகிறார்.

சினமா உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வரும் வைரமுத்து பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் இப்படியிருக்க சமீபத்தில் கேரளாவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஓ என் வி விருதை சமீபத்தில் அவர் கைப்பற்றினார் இதற்கு சின்மயி திடீரென எதிர்ப்பு தெரிவித்தார்.

இப்படி தொடர்ந்து அவரை  விமர்சித்துக்கொண்டு தான் வருகிறார் சின்மயி. இப்படியிருக்க நெட்டிசன் ஒருவர் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிற நீங்கள் வைரமுத்து அவர்களை ஏன் உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள் என கேட்டார் மேலும் ஏன் அவரது காலில் விழுந்தார்கள் என கூறி புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சின்மயி கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணியது அவரது மகன் தான் என பதிலளித்தார். இதனையடுத்து நெட்டிசன் ஒருவர் இந்தக் கேள்வி குறித்து வைரமுத்துவின் மகன் கார்க்கியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மதன் கார்க்கி இது மேலும் ஒரு பொய் அவர் என் தந்தையை அவரது திருமணத்திற்கு அழைக்க விரும்பினார்.

ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால் அவர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க மறுத்தார் இதனையடுத்து அவர் என்னிடம் வந்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொடுக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார் நானும் வாங்கி கொடுத்தேன்.

madhan karkki
madhan karkki

அவரின் வீட்டிற்கு தனியாக சென்று அவரது பாதங்களைத் தொட்டு ஆசி வாங்கிய கொண்டு திருமணத்திற்கு வரவேற்றதாக கூறினார்.