அஜித், விஜய்யும் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் படங்களின் மூலம் நேருக்கு நேர் மோதிதிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஏன் கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் பலப்பரிசை நடத்தியது. இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து வருகின்ற தீபாவளிக்கு அஜித்தின் ஏகே 62, விஜயின் லியோ படம் மோத வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி திரை உலகில் மோதும் இவர்கள் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
தல என்னைக்கும் தல தான்.. எதற்கும் கவலைப்பட மாட்டார் யாரைப் பற்றியும் பயப்பட மாட்டார் நேரடியாக பேசக்கூடியவர் பத்து வருடங்களுக்கு முன்பு நானும் விஜயின் நண்பரான ஸ்ரீநாத் இருவரும் அஜித்தை பார்க்க படப்பிடிப்பிற்கு சென்றோம் நாங்கள் இருவருமே விஜயின் நெருங்கிய நண்பர் என்று அஜித்திற்கு நன்றாக தெரியும்.. பார்த்தவுடன் கேரவனுக்கு அழைத்துச் சென்று நன்றாக பேசினார்.
எங்களுக்கு சாப்பிட ஐஸ் எல்லாம் கொடுத்தார் உடனே என்னை பார்த்து எனக்கு ஒரு ஆசை உங்க பிரண்ட் விஜயை ஜெயிக்கணும்.. அவருக்கு மேல இன்னும் ரெண்டு ஸ்டெப் மேல நானும் போகணும் என்று யோசிக்காமல் சொன்னார் அதான் அஜித் நாங்கள் விஜய் நண்பர்கள் என்று தெரிந்தும் அவர் மனதில் பட்டதை பேசியது..
அஜித்தின் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது இதை விஜயிடம் கூறினோம். அவரும் சிறித்துக் கொண்டே சூப்பர்ல மனசுல பட்டதை யோசிக்காமல் பேசினார் இல்ல.. அவரும் அதை தான் சொன்னான் அதான் அஜித் என்று சிரித்துக் கொண்டே அந்த பேட்டியில் கூறினார். அந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கம் காட்டு தீ போல வைரலாகி வருகிறது.