தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நயன்தாரா இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார் தமிழில் இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் மேலும் இவரது நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அது மட்டுமல்லாமல் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவர் தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டுகாதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதற்கு முன்பு இவர் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக பாண்டிச்சேரியில் இருக்கிறார் மேலும் இவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து காலணி கடைக்கு சென்றுள்ளார் அப்பொழுது இவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் இவரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நயன்தாரா இந்த கடைக்கு காலணி எடுக்க வந்துள்ளது போல் தெரியவந்துள்ளது மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து நயன்தாரா மிகவும் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே என கூறி வருகிறார்கள்.