மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை கொடுத்து அசத்திய பிக்பாஸ் ஜூலி.! எந்த இடங்களுக்கு போனார் தெரியுமா.?

julie
julie

தனது அசாதாரணமான குரல் வளத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜூலி. அந்த காரணத்தினால் மீடியா இவரை பின்தொடர்ந்தது ஒரு கட்டத்தில் இவர் பல்வேறு விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார் மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தினர்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸ் வீட்டில் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதை இன்னும் கவர்வார் என்று எதிர்பார்க்க பட்டது.

ஆனால் ஒரு சில தேவையில்லாத பேச்சுகளை பேசி மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து உடனே வெளியேறினார். அதன்பின் பெரிய அளவு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர மற்றும் பட வாய்ப்பை அள்ளுவதற்கு  போட்டோ ஷூட் நடத்தினார். ஆரம்பத்தில் ரசிகர்கள் கழுவி ஊற்றினாலும்  ஒரு கட்டத்தில் சற்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு  ஜூலியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தால் ஒரு கட்டத்தில் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

தனது அழகான போட்டோ ஷூட் மூலமாகவும்  திரைப்பட வாய்ப்புகளை பள்ளி வருகிறார் ஜூலி.  அந்த வகையில் டாக்டர் அனிதா பயங்கர உலகில் பப்ஜி ஆகிய படங்கள் இவர் நடித்துள்ளார் ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவும் வெளிவராமல் இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

மழை சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களான  சூளைமேடு, குளத்தூர் ஆகிய இடங்களில் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார் ஜூலி. மேலும் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.