தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக விளங்கி வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மக்களை கவரும் வகையில் சுவாரசியமான கதைகளத்துடன் சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அப்படி தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் பிரபல புகழ்பெற்ற பல திறமைகளை வைத்திருக்கும் ஞானசம்பந்தம் அவர்கள் நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் துறை பேராசிரியர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என பல துறைகளில் புகழ்பெற்றவராக இருந்து வருபவர் தான் ஞானசம்பந்தன். அதிலும் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராக பங்கு பெற்று சிறப்பித்துள்ளார். இதுவரையிலும் 30 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஞானசம்பந்தன் கடைசியாக கோவை சரளா நடித்த செம்பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது ஞான சம்பந்தன் குறித்து தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது இவர் சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ஆனந்தி என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். பொதுவாக ஞானசம்பந்தன் காமெடி கேரக்டரில் நடிப்பது வழக்கம் அப்படி ஆனந்தி சீரியலிலும் இவருடைய கேரக்டர் சுவாரஸ்யமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.