சினிமா உலகில் தனது திறமையை இன்னும் வளர்த்துக் கொண்டு போகின்றவர் நடிகர் சூர்யா ஆம் ஒவ்வொரு படம் வெளிவரும் பொழுது அவரது திறமை மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவரது கடின உழைப்புக்கு ஏற்றார் போல வெற்றிகளும் அண்மை காலமாக குவிக்கின்றன.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அந்த வெற்றியை தொடர்ந்து ருசிக்க அடுத்ததாக மீண்டும் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வெகு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் சூர்யா தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
அதன் பிறகு சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பண்ண உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பட குழு ஸ்பெஷலாக வெளியிட்டு உள்ளது.
அதில் திரு சூர்யா அவர்கள் மாடுபிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்ற பொழுது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு என கூறி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் தற்பொழுது இது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் வாடிவாசல் திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மிக பெரிய ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..