இளம் வயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு தற்போது வரையிலும் உச்ச நாச்சித்திரம் என்ற அந்தஸ்தை பெறாமலேயே இருக்கிறார் அதற்கு காரணம் சமீப காலமாக இவர் சரியான திரைப்படங்களில் நடிக்காதே காரணம். மேலும் இவருக்கு பின்னால் இருந்தவர்கள் கூட தற்போது திரையுலகில் ஓவர்டேக் செய்து சிறப்பாக பயணித்து வருகின்றனர்.
அதனை பல வருடங்களாக உணராத சிம்பு தற்போது அதிரடியாக தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஹிட் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். சிம்பு மீண்டும் நான் யார் என்பதை காட்ட ரெடியாக இருக்கிறார். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதைத்தொடர்ந்து அவர் பத்து தல என்ற திரைப்படத்திலும் பணியாற்ற உள்ளார்.
கன்னடத்தில் மொழியில் வெளியான மஃபடி என்ற படத்தையே தமிழில் ரீமேக் செய்து பத்து தல என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் அவருடன் இணைந்து கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படத்தை முடித்த கையோடு சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அதிக ஆசை காட்டி வருகிறார்.
ஆனால் வெற்றிமாறனோ இதற்கு முன்பாகவே அவருக்கு வடசென்னை என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் அதை விட்டுவிட்ட சிம்பு தற்பொழுது அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார் ஆனால் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தில் பணியாற்றிவருகிறார் இதை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் வாடிவாசல் என்ற திரைப்படத்தையும் இயக்கயுள்ளார்.
அதன் பிறகு வேண்டுமானால் சிம்புவுடன் ஒரு புதிய படத்தை இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் சிம்பு தற்போது பத்து தல படத்திற்கு பிறகு கௌதம் மேனனுடன் மீண்டும் ஒருமுறை இணைய உள்ளதாக கூறப்படுகிறது அந்த படத்திற்கு “நதிகளிலே நீராடும் சூரியன்” வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவருக்கு இணைந்தால் வெற்றிமாறன் சிம்பு இணைவது கேள்விகுறி தான்.