தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பார் இயக்குனர் சிறுத்தை சிவா. தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிறகுதான் ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை எடுத்துக் கிடைத்தது.
தீபாவளியை முன்னிட்டு நேற்று கோலாகலமாக அண்ணாத்த படம் வெளியாகி தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது இருப்பினும் பெரிய அளவு விமர்சனங்களை பெறவில்லை என்பதால் அடுத்தடுத்த நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பது சற்று கேள்விக்குறியாக இருக்கிறது. சிறந்த விமர்சனமே ஒரு படத்தை நீண்ட தூரம் பயணிக்க வைக்கும் ஆனால் அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளதால் தற்போது கேள்விக்குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ரஜினிக்காக இந்த திரைப்படம் எப்படியாவது நீண்ட நாட்கள் ஓடுவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என பலரும் கூறுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சிறுத்தை சிவா எப்படி இந்த படத்திற்கு கமிட்டானார் எதை வைத்து ரஜினி அவரை அழைத்தார் என்பது குறித்து தகவலை இயக்குனர் சிவா கூறி உள்ளார் அதில் அவர் கூற வருவது நான் அஜித்தை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தேன்.
அதுவும் கடைசியாக விசுவாசம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அஜித்தின் விசுவாசமும் ரஜினியின் பேட்ட திரைப்படமும் ஒரே நாளில் மோதியது இதில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது விசுவாசம். வசூல் வேட்டையில் பேட்ட திரைப்படம் 250 கோடியும், விசுவாசம் 204 கோடியை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் விசுவாசம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது கவர்ந்து இழுத்தது அதுபோல ரஜினியும் விசுவாசம் திரைப்படத்தை பார்த்துவிட்டு சிறுத்தை சிவா புகழ்ந்து பேசுவதோடு மட்டுமல்லாமல் வரச் சொல்லி வாழ்த்தி உள்ளார் போதாத குறைக்கு நாம் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறுத்தை சிவா ஒரு படத்தின் கதையை சொல்லி எடுத்தார் அந்த படமே அண்ணாத்தா படமாக மாறியது என கூறினார்.