90களில் இருந்து சினிமா உலகில் வெற்றியை கண்டு வந்த காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு போக போக காமெடியன் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஹீரோவாக பயணிக்க ஆசைப்பட்டார்.
அதை உணர்ந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு கதைகளை சொல்லி வடிவேலுவை இழுத்து போட்டனர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி, எலி மற்றும் தெனாலிராமன் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி பெற்று தந்தன. 23ம் புலிகேசி படம் வெற்றியின் காரணமாக அதன் இரண்டாம் பாகம் உருவானது.
ஆனால் இயக்குனர் ஷங்கருக்கும், வடிவேலுவுக்கும் சில மன வருத்தங்களை ஏற்பட்ட நிலையில் அதே பூதாகரமாக வெடித்தது அதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு இனி படங்களில் நடிக்கக்கூடாது என அதிரடி உத்தரவு போட எந்த ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் அவரை படத்தில் கமிட் செய்ய தயங்கினர்.
இதனால் தமிழ் சினிமாவில் நான்கு வருடங்களாக நடிக்க முடியாமல் போயிருந்த நிலையில் ஒரு வழியாக தற்போது அந்த பிரச்சினையை முடிவுக்கு வந்ததால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
வடிவேலுக்கு இப்பொழுதும் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட லைக்கா நிறுவனம் தொடர்ந்து ஐந்து திரைப்படத்தில் கமிட் செய்துள்ளது முதலாவதாக நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தை சுராஜ் இயக்குகிறார் ஆனால் இந்த திரைப்படத்தின் டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் கைபற்றி உள்ளதால் டைட்டிலை மாற்றுமாறு கூறியது அதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் பெயரை நாய் சேகர் ரிட்டன்ஸ் என வைக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இதனை தொடர்ந்து அவர் பல்வேறு நட்சத்திரங்களுடன் நடிக்க இருக்கிறார் அந்த வகையில் நடிகர் வடிவேலு தான் தனக்கு வேண்டும் என ஒத்த காலில் நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
இதுவரை சிவகார்த்திகேயன் வைகைப்புயல் வடிவேலு உடன் நடிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது வடிவேலு நடிக்க வந்துள்ளார். அவர் தான் தனக்கு வேண்டும் என கூறி உள்ளார் சிவகர்த்திகேயன். இதுவரை சூரி, சதீஷ் போன்ற காமெடி நடிகர்களை வைத்து இருந்த சிவகார்த்திகேயன் அவர்களை உதறித் தள்ளிவிட்டு தற்போது வடிவேலு தான் வேண்டும் என கூறியுள்ளாராம்.