தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது முதலாவதாக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது அதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி மிக ஈஸியாக வெற்றியை ருசித்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது இதில் வீராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணி தற்பொழுது தோல்வியின் விளிம்பில் சிக்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக வீரர்கள் செயல்படவில்லை என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க வீரரான கேஎல் ராகுல் மற்றும் அகர்வால் ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடுகின்றனர் பின்வரும் வீரர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அதிலும் குறிப்பாக தோனியின் இடத்தை தற்போது பிடித்திருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் சொல்லிக்கொள்ளும்படி தென்னாபிரிக்காவுடனான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தையே கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து விக்கெட்டுகள் விழும் பொழுது தடுப்பாட்டம் ஆடாமல் ஏனோதானோவென்று ஆடுவதாக ரிஷாப் பந்தை ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் அவரை விமர்சித்தனர் இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கௌதம் கம்பீர் ரிஷப் பந்த் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறியது.
சரியாக விளையாடாமல் ஏதோவென்று ரிஷப் பந்து விளையாடுவது போல இருக்கிறது இப்படி விளையாடுபவர்களுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள் என காட்டமாக கம்பீர் பேசியுள்ளார் தோனியின் இடத்தை அவர் பிடித்திருக்கிறார் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர் இன்னும் உணரவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.