லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்து வருவதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இயக்கிய படங்கள் வெற்றி படங்களாக இருந்தாலும் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக கமலின் விக்ரம் திரைப்படம் தான் அமைந்துள்ளது.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இந்த படம் திரையரங்கில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் இன்னும் சில கோடிகளை அள்ளும் என தெரிவிக்கப்படுகிறது விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்.
விஜயை வைத்து தளபதி 67 திரைப்படத்தை வெகுவிரைவிலேயே எடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் லோகேஷ் நிதானமாக அடக்கி வாசித்துக் கொண்டு இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பிடித்த இயக்குனராக இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜிடம் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்பொழுது ஒரு கேள்வியில் நீங்கள் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நடிகர் கார்த்தி உடன் பேசுவீர்களா என கேட்டதற்கு அவர் சொன்னது அவருடன் நான் படம் செய்து முடித்ததும்.
என்னிடம் போன் செய்து பேசுவார் படம் ஹிட் ஆகிவிட்டது நிதானமாக இருயா என அட்வைஸ் செய்தாராம். லோகேஷ் அதை சிறப்பாக கையாண்டு வருகிறார் ஆம் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தாலும் தலைக்கனம் இல்லாமல் நிதானமாக இருந்து வருகிறார் அதுவே அவரை இன்னும் அடுத்தடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும் என கூறப்படுகிறது.