சினிமாவைப் பொருத்தவரை ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் சினிமாவில் இருக்கும் ஹீரோ ரசிகர்களை கவர்வது போல் வில்லன்களும் ரசிகர்களை கவர்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஏராளமான வில்லன் நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
ஒரு படம் ஹிட் அடைகிறது என்றால் ஹீரோ மட்டும் அந்த திரைப்படத்தில் பிரபலமாகப் பேசப்படுவார்கள் என்று நினைக்கக் கூடாது ஏனென்றால் வில்லன்களும் ஹீரோ லெவலுக்கு பிரபலமாக பேசப்படுகிறார்கள். ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்கள் பலர் உண்டு. அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடையாதவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் கராத்தே ராஜா. இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.
இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் முதன் முதலாக துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் சூரியா அவருக்கு நண்பராக நடித்திருந்தார்.
அதன்பிறகு விருமாண்டி, சிட்டிசன், கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், கண்ணம்மா அன்பே வா, பம்பர கண்ணாலே, ஆதி, போக்கிரி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சந்தனக்காடு என்ற சீரியலில் வீரப்பனின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு சீரியலாக உருவாக்கியது. இதில் முழுக்க முழுக்க வீரப்பனாக நடித்தவர் கராத்தே ராஜா இதில் தனது முழு நடிப்பையும் வெளிப்படுத்தி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் 2009ஆம் ஆண்டு திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள் இந்த நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறினார் பின்பு காவல் துறையின் உதவியோடு தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இருக்க வைத்தார். தற்போது இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.