தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் இப்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக வம்சி எடுத்துள்ளார் தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்திருக்கிறார் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது
அவருடன் கைகோர்த்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதேபோல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் போட்டிகள் கடுமையாக இருக்கும் என தெரியவருகிறது.
வாரிசு படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி இந்த படம் தான் விஜய்க்கு முதல் 50 கோடியை பெற்றுத்தந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து திரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து அசத்தினர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்க்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்ததும் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் கில்லி திரைப்படத்திற்காக ..
விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்துதான் நாம் பார்க்க இருக்கிறோம் கில்லி படத்திற்காக விஜய் சுமார் 4 கோடி சம்பளம் வாங்கினாராம் ஆனால் இப்போ அவருடைய ரேஞ்சே வேற தற்போது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.