அந்தப் படத்தை பார்த்ததிலிருந்து நான் விஜயின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் – ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்

rashmika
rashmika

தளபதி விஜய்க்கு ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகராக இருந்து வருகின்றனர் அதை நாம் பார்த்திருக்கிறோம் பலர் சொல்லி கேள்வியும் பட்டிருக்கிறோம் அப்படி ராஷ்மிகா மந்தனாவே வெளிபடையாக நான் விஜயின் தீவிர ரசிகை என பல தடவை சொல்லி இருக்கிறார். விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை விட்டு விட மாட்டேன் என கூறினார்.

மாஸ்டர் படத்தில் இவர் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற வதந்திகள் பரவியது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய ராஷ்மிகா மந்தனா நான் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை அப்படி நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் விட்டிருக்க மாட்டேன் என கூறியிருந்தார்

அந்த அளவிற்கு படத்தில் நடிக்க காத்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு வழியாக வம்சி வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது விஜய் உடன் நடித்துள்ளார். வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதற்கு முன்பாக ரசிகர்களை கட்டி இழுக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது பட குழு. அந்த வகையில் நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு பாடத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது அப்பொழுது ராஷ்மிகா மந்தனா  வெள்ளை சேரியில் சும்மா தேவதை போல் வந்து அசதினார்.

மேடையில் அவர் நான் விஜயின் தீவிர ரசிகையாக மாறியதற்கு காரணம் படம் தான் எனக்கூறி உண்மையை உடைத்துள்ளார். அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. சிறுவயதில் எனது தந்தையுடன் கில்லி FDFS பார்க்க போயிருந்தேன்.. படத்தைப் பார்த்ததிலிருந்து எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை அன்றிலிருந்து நான் விஜயின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் என கூறினார்