காசேதான் கடவுளடா… ட்விட் போட்டு அஜித் ரசிகர்களை வெறியேற்றிவிட்ட ஜிப்ரான்.!

thunivu
thunivu

இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் தெரிந்தது. இதனை தொடர்ந்து  நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் அதே தினத்தில் வெளியாக இருக்கிறது.

இதனால் விஜய் அஜித் படங்கள் ஒரே நேரத்தில் நேரடியாக மோத இருக்கிறது இதனால் ரசிகர்கள் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என்று தற்போது இணையத்தை கதிகலங்க வைத்துள்ளனர் விஜய், அஜித் ரசிகர்கள். இதனை தொடர்ந்து வாரிசு படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளியாகி இருந்த நிலையில் துணிவு படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது இதனால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தார்கள்.

அதன் பிறகு சமீபத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடல் வெளியான உடனே அஜித் ரசிகர்களை கையில் பிடிக்க கூட முடியவில்லை அந்த அளவிற்கு அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடியிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் சில்லா சில்லா பாடலை எழுதிய வைசாக் ஒரு பேட்டியில் அடுத்த பாடல் சில்லா சில்லா பாடலை விட மரண குத்தா இருக்கும் என்று கூறியுள்ளார் அந்த வகையில் தற்போது பாடலாசிரியர் வைசாக் அவர்களும் இசையமைப்பாளர் ஜிப்ரானம் அவர்களும் தனது titter பக்கத்தில் துணிவு படத்தின் அடுத்த பாடலின் வரியை வெளியிட்டுள்ளார்.

துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலை தொடர்ந்து அடுத்த பாடல் மரண குத்தாக இருக்கும் என்று கூறியுள்ள நிலையில் அடுத்த பாடல் “காசேதான் கடவுளடா” என்று தொடங்க உள்ளதாக தற்போது ஜிப்ரான் அவர்களும் வைசாக் அவர்களும் தனது twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இதோ அவர் பதிவிட்ட ட்விட்…