தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது அது மட்டும் இல்லாமல் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் தற்பொழுது படங்களில் நடிப்பதை அதிரடியாக நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார் அதற்காக பல நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
மேலும் தற்பொழுது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விஜய் நடிப்பில் இன்றும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றுதான் கில்லி இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகியது.
பரிகாரம் என்ற பெயரில் கையில் சூடத்தை ஏற்றிய விஜயா.. கதறி அழும் ரோகிணி..
கில்லி திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் பிரகாஷ்ராஜ் ஆஷிஷ், தாமு, நாகேந்திர பிரசாத் என மிகப் பெரிய நட்த்திர படடாளே நடித்திருந்தார்கள். கில்லி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அர்ஜுனூறவில்லு என்ற பாடல் இன்று ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் ஷார்ட்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டாலே இந்த பாடல் இடம் பெற்றிருக்கும்.
படத்திற்கு வித்தியாசாகர் தான் இசையமைத்திருந்தார் படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக செல்லமே என்ற வசனம் பேசி இருந்தார் இந்த வசனம் 90 கிட்ஸ்களுக்கு ஃபேவரட் வசனம் கில்லி திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியானது படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மீண்டும் திரையில் தளபதியை பார்க்க மெய் சிலிர்க்கிறது என கூறியுள்ளார்கள் முதல் நாளில் 7 கோடி வசூலித்திருந்தது கில்லி திரைப்படம் இந்த நிலையில் மூன்றாவது நாள் முடிவில் 14 கோடி வரை கில்லி திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.