விஜய் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் கில்லி இந்தத் திரைப்படம் தெலுங்கில் படும் ஹிட் அடித்தது ஒக்கடு என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் கில்லி படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள் இந்த திரைப்படம் வெளியாகி 2001 ஆம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் திரைப்பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
படத்தில் விஜய் கபடி விளையாட்டு வீரராக நடித்திருப்பார் இவரின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி அதனால் தந்தை மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும் ஆனால் மகன் மீது அதிக அன்பு வைத்திருப்பார் தாய் அதேபோல் இவருக்கு ஒரு தங்கை இருப்பார் அவர் எப்பொழுதும் விஜய்யை விட்டுக் கொடுக்காத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மதுரையில் முத்துப்பாண்டி என்ற ரவுடியை சமாளித்து தனலட்சுமி என்ற பெண்ணை தன்னுடன் அழைத்து வந்து விடுவார்.
முத்துப்பாண்டி தனலட்சுமி திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார் ஆனால் தனலட்சுமி எப்படியாவது அமெரிக்காவில் தன்னுடைய சொந்தக்கார வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்வார்கள் அதேபோல் தளபதி விஜய் அவர்களும் அழைத்து வந்து அமெரிக்காவுக்கு அனுப்ப முயற்சி செய்வார் ஆனால் திடீரென இருவருக்கும் காதல் மலர்ந்து இங்கே இருக்க முடிவு செய்வார்கள் ஆனால் தனலட்சுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முத்து பாண்டி நேரடியாக வந்து சண்டை செய்வார் அது மட்டும் இல்லாமல் கபடியில் தளபதி விஜய் வெற்றி பெறுவார் பிறகு தனலட்சுமியை தனது வீட்டிற்க்கே அழைத்துச் செல்வார்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது நடிகர் விஜயின் திரை பயணத்தில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி தான் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் தவிர வேறு எந்த ஒரு நடிகரையும் நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது அந்த அளவு விஜய் ரசிகர் மத்தியில் வேலு என்ற கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்து விட்டார்.
ஆனால் இந்த கில்லி திரைப்படத்தில் முதன் முதலில் விக்ரமை வைத்து தான் தரணி இயக்க இருந்தார் தில், தூள் ஆகிய திரைப்படங்களை ஏற்கனவே விக்ரமே வைத்து இயக்கியதால் இந்த திரைப்படத்திலும் நடிக்க வைக்க தரணி ஆசைப்பட்டார் அதேபோல் இந்த திரைப்படத்தில் ஜோதிகாவையும் நடிக்க வைக்க தரணி ஆசைப்பட்டார் ஆனால் இருவருமே வேறொரு திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது ஆனால் இன்று வரை இதனை நினைத்து இருவரும் வருத்தப்படுவார்கள்.