இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ரஜினிக்கு 169 வது திரைப்படம் ஆகும். இதற்கு முன் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை அதனால் ஜெயிலர் திரைப்படம் சிறப்பாக இருக்க வேண்டும் என நெல்சனுக்கு அப்பப்போ ரஜினி அறிவுரை கூறியும் வருகிறார்.
நெல்சனும் ரஜினி சொன்னவற்றையும் கேட்டுக்கொண்டு கதையை சிறப்பாக தயார் செய்து உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜெயிலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அதனால் அண்மையில் இந்த படத்திற்காக ஜெயில் போன்ற செட் அமைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் போன்ற பல நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர். இவர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயனும் ஜெயிலர் படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இயக்குனர் நெல்சனும் சிவகார்த்திகேயனும் இணைந்து டாக்டர்..
என்னும் படத்தில் பணியாற்றியதன் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நெல்சன் இடம் தெரிவித்துள்ளார். நெல்சனும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் சின்ன வயசு கதாபாத்திரம் ஒன்றை ரெடி செய்து அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க திட்டம் போட்டு உள்ளார்.
பின்பு நெல்சன் ரஜினியிடம் சென்று இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாமா என கேட்டுள்ளார் அதற்கு ரஜினி மறுத்துவிட்டாராம். என்னுடைய படம் என்றால் அது எனது படமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் சிவகார்த்திகேயனை ஜெயிலர் படத்தில் வேண்டாம் என ரஜினி கூறியுள்ளார். மேலும் ரஜினி இதற்கு முன்பும் அவரது திரைப்படங்களில் மற்றொரு முக்கிய ஹீரோவை நடிக்க வைக்க பெரும்பாலும் அனுமதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது