சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் கவர்ச்சி நடிகையான சிலுக்கு சுமிதாவையே ஓரம்கட்டி அவர் தான் இளம் நடிகை கேப்ரில்லா.
இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் சுருதிஹாசனின் தங்கையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
இவர் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார்.இதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வரும் பெண்களில் இவரும் ஒருவராக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு சோஷியல் மீடியாவில் பிசியாக இருந்து வந்த இவர் கொரோனா பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில் இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தற்ப்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறாராம்.இந்த தகவல் தான் தற்பொழுது ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.