90 காலகட்டங்களில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியைக் பெற்றவர் சாரத்குமார் ஒரு கட்டத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாருடன் இணைந்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து சரத்குமாரை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார்.
அடுத்ததாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க இவர் சூரியன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் இந்த படத்தை பவித்திரன் இயக்கியிருந்தார் பவித்திரனுக்கு அசிஸ்டெண்ட்டாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வேலை பார்த்து வந்தார். திடீரென இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது அதனால் இந்த படத்திலிருந்து சங்கர் வெளியேறினார்.
பின் ஷங்கர் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஷங்கரும் முதலில் கேடி குஞ்சுமோன்னிடம் ஒரு கதையைக் கூறி உள்ளார். அது அவருக்கும் பிடித்துப்போகவே இது படமாக்கப்பட வேண்டும் என சொல்லி உள்ளார். இந்த படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிக்க இருந்தார்.
சூரியன் படத்திற்குப் பிறகு நாம் இணைந்து படம் பண்ணலாம் என கூறி இருந்தாராம். இதனிடையே இயக்குனர் பவித்ரனுக்கும், கேடி குஞ்சுமோன்னுக்கும் மோதல் வெடித்து இருந்ததாம். இந்த நிலையில்தான் சரத்குமாரின் பிறந்த நாள் வந்தது அப்போது பவித்திரன் மீண்டும் சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா என்ற படத்தை இயக்க அறிவித்தார் சங்கர் எடுக்கப்போகும் படமும் இந்த படமும் ஒன்றாக ரிலீசாக வேண்டும் எனவும் கூறினாராம்.
பவித்திரன் மீசையை வை என்று கூறியுள்ளார் குஞ்சு மோகன் நடிகர் சரத்குமாரை மீசையை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இருவருக்குமிடையே நடுவில் சரத்குமார் மாற்றிக்கொண்டு திருதிருவென முழித்தார் யார் படத்திலும் நடிக்க வேண்டும் என்பதே புரியாமல் போனதாம் ஒரு கட்டத்தில் சூரியன் படம் இப்போது தான் வெளியாகி வெற்றி அடைந்தது.
அதனால் ஐ லவ் இந்தியா படத்தில் நடித்து விடலாம் என அவர் முடிவெடுத்து விட்டாராம் பின் குஞ்சு மோகன் மற்றும் ஷங்கர் இணைந்து ஜென்டில்மேன் என்ற படத்தை எடுத்தனர் சரத்குமாருக்கு பதிலாக அர்ஜுனனை நடிக்க வைத்தனர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது முதலில் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க சரத்குமார் தான் போட்டோ ஷூட் எல்லாம் எடுத்து தயாராக இருந்தாராம் ஆனால் கடைசியில் நடந்த குளறுபடி காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.