தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் 2003ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் இவர் நடித்த முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
அதனால் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார். இருந்தாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதனால் ஹிந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
மேலும் இவர் தமிழில் விஜய் அவர்களுடன் இணைந்த சச்சின், ஜெயம் ரவியுடன் இணைந்து சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் அவருடன் இணைந்து உத்தமபுத்திரன் விஜயுடன் இணைந்து வேலாயுதம் என ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தமிழில் இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை அதனால் தனது ஆதிக்கத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் செலுத்தினார்.
இந்தநிலையில் 2012ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரித்தேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த நிலையில் ஜெனிலியா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு அதிரடியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவார் அந்த வகையில் தற்போது தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதொ அந்த புகைப்படம்.