தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் சூப்பராக நடித்துள்ளார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க.. மறுபக்கம் வாரிசு படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாற்ற விஜய் அடுத்தடுத்த அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
அண்மையில் கூட பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு சென்று தனது ரசிகர்களை சந்தித்தார் அப்பொழுது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அது பெரிய அளவில் வைரலானது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சந்தித்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றனர் அதில் ஒரு ரசிகர் விஜய் பற்றி பெருமையாக பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
எங்களுடைய கிராமம் மிக சிறியது எங்களுடைய கிராமத்திற்கு பஸ் வசதி கூட கிடையாது தெரு வசதியும் கிடையாது ஆனாலும் விஜய் எங்களுக்காக எங்கள் கிராமத்திற்கு வந்தார். கொஞ்ச நேரம் எங்களுடன் இருந்தார் எங்கள் ஊருக்கு அன்னதானம் மற்றும் கோயில் எல்லாம் அவர்தான் கட்டிக் கொடுத்தார். எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் அண்ணாவின் படங்களுடைய பெயர்களை தான் வைத்து வருகிறோம்.
எங்கள் ஊருக்கு அவர் பெருமாள் கோவில் ஒன்றை கட்டித் தந்தார். அதற்காக அந்த ஊர் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தாம்.. முதன் முதலில் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தது எங்கள் கிராமத்தில் தான் என பெருமையாக பேசினார். அந்த ஊரின் பெயர் சிவ கூடல் கிராமம். அந்த ரசிகர் இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
#Vijay | விஜய் எங்கள் கிராமத்திற்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார்.
அவர் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறோம்.
சிவகூடல் கிராம ரசிகர் நெகிழ்ச்சி. #VijayMakkalIyyakkam | #VijayFansMeet pic.twitter.com/KwOyhEY185
— Senthilraja R (@SenthilraajaR) November 20, 2022