தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முன்னணி இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்கு தயக்கம் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹாலிவுட் சினிமாவில் கூட என்றும் அறுபது வயதுக்கு மேலான இயக்குனர்களை வைத்து முன்னணி நடிகர்கள் திரைப்படம் நடித்து வருகிறார்கள் ஆனால் நமது இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயது ஆகிவிட்டால் இயக்குனர்களை ஓரம் கட்டி விடுகிறார்கள் இப்படி ஒரு சம்பவம் கோலிவுட் சினிமாவிலும் நடந்துள்ளது.
தற்போது தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் படக்குழுவினர்கள் திட்டமிட்டபடி மூன்று கட்ட படப்பிடிப்பு மிக சிறப்பாக முடிந்துள்ளது.
இந்நிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்நிலையில் என்ற திரைப் படத்தை இயக்கும் இயக்குனர் வேறு யாரும் கிடையாது கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான். மேலும் இசையமைப்பாளராக அனிருத் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் அடுத்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு இயக்குனர்களும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள் இதில் பி வாசுவும் ஒருவர் இவர்தான் லாரன்சை வைத்து சந்திரமுகி திரைப்படத்தையும் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் சன் பிக்சர் உதவியுடன் பி வாசு அவர்கள் விஜய்யிடம் ஒரு கதை கூறியுள்ளாராம் ஆனால் விஜய்க்கு அந்த கதை பிடிக்காததன் காரணமாக நாசுக்கா வேறு ஒரு கதை கொண்டு வாருங்கள் என்று கூறி வழி அனுப்பி விட்டாராம்.