சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ஏனெனில் நெல்சனின் முந்தைய படமான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் பலருக்கும் பிடித்து போய் எதிர்பாராத அளவு வசூல் வேட்டை நடத்தியது.
மேலும் நெல்சனின் படங்கள் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக அமையும் என்பதால் நெல்சன் மற்றும் விஜயின் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் வெளிவந்து எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகின்றன.
விஜய்யின் சினிமா கேரியரில் இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இருந்தாலும் முதல் இரு நாட்களில் மற்ற படங்களை விட நல்ல வசூல் வேட்டை நடத்திய பீஸ்ட் நாட்கள் செல்லச் செல்ல படத்தின் வசூல் குறைந்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் லாஜிக் சுத்தமாக இல்லை என்றுதான் பலரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
அதிலும் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் ஃபைட்டர் ஜெட் செல்லும் வேகத்தில் இருந்து கொண்டு மற்றொரு ஃபைட்டர் ஜெட் ஓட்டிக்கொண்டு போகும் வீரருக்கு விஜய் எப்படி சல்யூட் அடித்தார். இதில் லாஜிக் இருக்கா என்று பலரும் கேட்டார்கள். இந்த நிலையில் சமீபத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள Top Gun: maverick படத்தின் ஜெட் ட்ரைன்னிங் வீடியோ வெளிவந்தது.
அதில் ஜெட் ஓட்டிக்கொண்டு நடிகர் டாம் க்ரூஸ் தம்ஸ் அப் காட்டினார். ஆனால் இதை யாரும் விமர்சிக்கவில்லை. டாம் க்ருஸ் செய்தால் லாஜிக் இருக்கு விஜய் செய்தால் லாஜிக் இல்லையா என்று விஜய் ரசிகர்கள் பதிவை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.