Genelia is chasing her husband video: நடிகை ஜெனிலியா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் திரைப்படம் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இவர் முதன்முதலாக சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதனால் முதல் திரைப்படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஜெயம் ரவி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். பின்பு சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் குதுகலம் குறும்புத்தனம் அதிகம் நிறைந்த பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்தார்.
பாலிவுட்டில் நடிக்க தொடங்கிய பிறகு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின்2016 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். தற்பொழுது இந்த ஜோடிக்கு ரியான், ரேயல் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கொரோனா காரணமாக 144 தடை விதிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள்.
அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஊரடங்கில் ஜெனிலியா தனது கணவரை அதிக வேலை வாங்கியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இவர் டிக்டாக்கில் விளையாட்டாக இந்த காட்சியை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை மாதிரி நடிக்க ஜெனிலியா இப்போது கணவரை என்ன விரட்ட விரட்டுகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Happy Birthday Dearest @ajaydevgn Some isolation humour with @geneliad on one of your songs- have a great one my brother pic.twitter.com/xTMBU8GZG5
— Riteish Deshmukh (@Riteishd) April 2, 2020