மீண்டும் ஹாஸினியாக வந்த ஜெனிலியா.! ரசிகர்களை மெய்மறந்து பார்க்க வைத்த புகைப்படம்…

genelia

வெகுளியான முகத்தோடும் துரு துருவென நடிப்போடும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா. இவர் முதல் முதலில் பாலிவுட்டில் தான் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

என்னதான் பாய்ஸ் திரைப்படம் வெற்றி பெற்று இருந்தாலும் கதாநாயகிக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்து உள்ளார்.

இருந்தாலும் நடிகை ஜெனிலியாவிற்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக தெலுங்கில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் ஆகிய இரண்டு படங்களில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடித்த ஜெனிலியாவின் கதாபாத்திரம் இன்று வரையிலும் ரசிகர்கள் மீம்ஸ் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை ஜெனிலியா.

genelia
genelia

அதன் பிறகு பாலிவுட், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பட வாய்ப்பு இவருக்கு குவிய ஆரம்பித்தது ஆனால் தமிழில் உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு வேற எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னதான் குறுகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை ஜெனிலியா.

பின்னர் ஜெனிலியா அவர்கள் இலங்கை விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பல சர்ச்சையில் சிக்கினார். மேலும் நடிகை ஜெனிலியா அவர்கள் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஜெனிலியா தனது குடும்பங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை தொடர்ந்து புடவையில் அழகு மாறாமல் ஜொலி ஜொலிக்கும்  புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு அழகு குறையாமல் இருக்கீங்கலே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைபடம்.

genelia
genelia
genelia