கடந்த வருடம் தடை செய்யப்பட்ட தனியார் செயலியான டிக் டாக் மூலம் பலர் சினிமாவில் பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்தவகையில் ஆண்களை விடவும் பெண்கள் தான் தற்பொழுது டிக்டாக் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி கலக்கி வருகிறார்கள்.
பொதுவாக பெண்கள் அழகாக இருந்தால் மட்டும் தான் சினிமாவில் பிரபலம் அடைய முடியும் என்பது இல்லாமல் திறமை இருந்தாலும் சினிமாவில் கண்டிப்பாக பிரபலம் அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து தற்போது கேப்ரில்லா உதாரணமாக திகழ்கிறார்.
இவர் கருப்பாக இருந்தாலும் டிக் டாக்கில் தனது நடனம் ஆடும் வீடியோக்கள், டப்ஸ்மாஷ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தற்போழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் தற்போது முடங்கி உள்ளது.
ஆனால் சினிமாவில் மட்டும் படப்பிடிப்புகள் சில காலங்களாக நடைபெற்று வருகிறது. இதன் விளைவை தற்பொழுது பல நட்சத்திரங்கள் அனுபவித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் உள்ள பிக் பாஸ் கேப்ரில்லா, அஜீத், சென்ட்ராயன் உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களை தொடர்ந்து சுந்தரி சீரியல்களில் கேப்ரில்லாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆனால் கேப்ரியலா சமீபத்தில் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் கொரோனா தொற்று உறுதியானதும் தனிமைப் படுத்திக் கொண்டு தற்போது குணமடைந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.