சினிமாவிற்கு அறிமுகமாகிவுள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.ஏராளமான ரசிகர்கள் இதனை ஆதரித்தாலும் சில ரசிகர்கள் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை கேப்ரியலா. இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அப்பா உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஒரு கட்டத்திற்குப் பிறகு படிப்பை பார்த்து வந்த கேப்ரில்லா மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்றி கொடுக்கும் பொழுது சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காகவும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார். இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் தற்போது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்ரில்லா இதற்கு முன்பு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தனது திறமையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஜித்துடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கிட்டத்தட்ட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது ஃபுல் மேக்கப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.