மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளியை விட்டு விலகிய மேலும் ஒரு பிரபலம்.! டிஆர்பிக்கு ஆப்பு தான்..

COOK-WITH-COMALI
COOK-WITH-COMALI

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலராலும் பார்க்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் ஒவ்வொரு கேரக்டரையும் ரசித்து வருகிறார்கள். அப்படி தளபதி விஜய் முதல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஏராளமான பிரபலங்கள் நிகழ்ச்சியினை விரும்பி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4து நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் கடந்த சீசன்களை விட இந்த சீசன் சொல்லும் அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும். அதாவது மிகவும் சுவாரசியமான சுற்றுக்களுடன் ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் இந்த சீசனில் ரசிகர்கள் விரும்பிய கோமாளிகள் இடம்பெறாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே பாலா பங்கு பெறவில்லை இவரை தொடர்ந்து மணிமேகலை சில வாரங்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்.

இவ்வாறு தன்னுடைய காமெடியின் மூலம் தனக்கென மணிமேகலை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்த நிலையில் இவர் சில சொந்த காரணங்களினால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் இவரை தொடர்ந்து மேலும் மற்றொரு பிரபலம் விலகியுள்ளார்.

அதாவது டிக் டாக் மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் ஜிபி முத்து இவருக்கு பிக்பாஸ் சீசன் 4வது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது அதில் தனது குழந்தைகளை பிரிந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாமல் நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார். மேலும் சில படங்களில் நடித்து வரும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குப் பெற்று வருகிறார்.

இவருடைய பேச்சு போன்றவை ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஜிபி முத்துவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. அதாவது மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் ஜிபி முத்து தொடர்ந்து ஓய்வெடுக்காமல் பட ஷூட்டிங் வேலைகளில் இருந்து வந்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கத்தி கத்தி பேசி வந்த நிலையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளனர். எனவே ஜிபி முத்து இந்நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.