மனதில் உள்ள சோகத்தை கொட்டி தீர்க்க ஆளில்லாமல் தவிக்கும் ஜிபி முத்து..! செம்ம கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!

gp-muthu-2
gp-muthu-2

ரசிகர்கள் மத்தியில் டிக் டாக் மற்றும் யூ டியூப் மூலமாக பிரபலமானவர்தான் ஜி பி முத்து இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனில் போட்டியளராக தேர்வாகி அசத்தியிருந்தார். அந்த வகையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த போட்டிக்கு ஜிபி முத்துவுக்கு  ஆதரவாக வாக்குப்பதிவு செய்து இவரை முதல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு நடந்த செயல் சமூக வலைதள பக்கத்தில் பெரும் ஆச்சிரியத்தை உருவாக்கியது மட்டும் இல்லாமல் இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மரக்கடை ஓனராக  உள்ளவர் இவர் டிக் டாக் மூலம் தான் ரசிகர் மத்தியில் பிரபலமானார் பொதுவாக இவர் டிக் டாக் youtube மூலமாக பலராலும் விமர்சிக்கப்பட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் சமீபத்தில் இவர் பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டதன் காரணமாக அனைத்து விமர்சனங்களையும் உடைத்து எறிந்து விட்டார் மேலும் இவர் வெகுலியான நடவடிக்கைகளும் கடுமையான உழைப்பின் மூலமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இதன் காரணமாகவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஜி பி முத்து தான் என அனைவரும் முதல் நாளை முடிவு செய்து விட்டார்கள் இவருக்காக ஜி பி முத்து ஆர்மி என ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் இவர் எந்த ஒரு நாமினேஷனிலும் சிக்காமல் எனது மகன் குடும்பத்தின் காரணமாக  அவர்களைப் பிரிந்து இருக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ஆனால் இவருக்கு சக போட்டியாளர்கள் மற்றும் கமல் என அனைவரும் ஆறுதல் தெரிவித்து பார்த்தோம் தனக்கு குடும்பம் தான் முக்கியம் என அடம் பிடித்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் ஜி பி முத்து தன்னுடைய குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்த வீடியோ மற்றும் தீபாவளி கொண்டாடிய வீடியோ ஆகியவற்றை பதிவு செய்திருந்தார் அதுமட்டுமில்லாமல் தான் தற்பொழுது மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தனது சோகத்தை கேட்க ஆளே இல்லை என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் எனக்கு எவ்வளவு சோகம் இருக்கிறது தெரியுமா என அவருடைய மனைவியிடம் கேட்டவுடன் நாங்களா உங்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து வர சொன்னோம் நீங்களாதான் கேட்காமல் வந்து விட்டீர்கள் என கூறியது மட்டும் இல்லாமல் இப்பொழுது எங்களிடம் புலம்புவது ஏன் என்று கூறினார்கள் அதோடு அவர் நண்பர்களும்  தெறித்து ஓடிய கலகலப்பான வீடியோ வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

gp muththu
gp muththu