கமலஹாசனுக்கே டப் கொடுக்கும் ஜிபி முத்து.! இதன் மூலம் டாப் ஹீரோயின்களுக்கு ரூட்டா.?

bigg-boss-06
bigg-boss-06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த சீரியல் தொகுத்து வழங்குவதற்கு கமலஹாசன் அவர்கள் தான் சரியாக இருக்கிறார் என பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பலரும் நடிகர் கமலஹாசனுக்காகவே இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வார இறுதியில் நாட்களில் விஜய் டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக உயர்ந்து இருக்கிறது இதற்கு காரணம் கமல் மட்டும்தான் ஏனென்றால் போட்டியாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற வித்தையை பல விதங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே ரசிகர்கள் கமலஹாசனை ஆண்டவர் என அழைத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக நடிகர் கமலஹாசனை தவிர வேறு யாராலும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த சீசனில் நடிகர் கமலஹாசன் மற்றும் ஜிபி முத்து இவர்களுடைய காம்போ ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது.

யூடியூப் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து பேச்சி பலரையும் கவர்ந்ததுள்ளார் மேலும் வெகுளித்தனமாக இவர் பேசுவது அனைவரையும் கவர்ந்து  இருக்கிறது மேலும் நடிகர் கமல் எவ்வளவு பெரிய நடிகர் என தெரியும் ஆனால் நடிகர் என்ற ஒரு பயம் இல்லாமல் எதார்த்தமாக ஜிபி முத்து நடிகர் கமலஹாசனிடம் பேசி வருகிறார். அதிலும் முக்கியமாக ஆதாம் பால் பற்றிய பேசிய ஆண்டவரிடம் ஆதாமா எங்க இருக்காரு  என்று அவர் கேட்டது செம காமெடியாக இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள புரோமோவில் இவருடைய அட்ராசிட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது அதாவது பிக்பாஸ் ஜி பி முத்துவிற்கு பார்சல் அனுப்பி இருக்கிறார் அதனை போஸ்ட் ஆபீஸ்க்குள் அவருக்காக முருகா அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஜிபி முத்து வீட்டில் உள்ள கேமரா முன்பாக தனக்கு முருங்கக்காய் சாம்பார் வேண்டும் அதனால் முருங்கக்காய் அனுப்பி வையுங்கள் என்று கதறி இருந்தார்.

இதன் காரணமாக பிக்பாஸ் வார இறுதியில் அவருக்கு முருங்கக்காய் அனுப்பி வைத்திருக்கிறது இதனைப் பார்த்து சந்தோஷப்பட்ட ஜிபி முத்துவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில் நீங்கள் ஹீரோவானால் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு ஜிபி முத்து சொன்ன பதில் பெரிதும் ஹைலைட்டாக உள்ளது அதாவது அவர் தனக்கு நயன்தாரா மற்றும் சிம்ரனுடன் நடிக்க ஆசை என்று கூறியதால் இதனை பார்த்து கமல் வாய் அடைத்துப் போனார். பிறகு கமலிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் ஜிபி முத்து திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார். எனவே அவர் சொல்லியிருக்கும் பதில் இன்றைய எபிசோடில் தெரியவரும்.