Gayathri : படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை வேதனையுடன் பகிர்ந்த நடிகை காயத்ரி. இவர் 18 வயது படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு நல்ல கதை அம்சம்முள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார் அந்த வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து மிரட்டினார் இப்படி திறமையான நடிகையாக வலம் வந்த காயத்திற்கு இப்பொழுது வரையிலும் பெரிய அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை.. ஆனால் தன்னை நம்பி வரும் நல்ல படங்களில் நடித்து வருகிறார்.
அப்படித்தான் சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இப்படிப்பட்ட காயத்ரி சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை கிடையாது நான் ஒரு படப்பிடிற்கு சென்றால் அங்கு என்னை சுற்றி முழுவதுமே ஆண்கள் தான் நிறைய பேர் இருப்பாங்க நான் மட்டுமே ஒரு பெண்ணாக இருப்பேன் அந்த நேரத்தில் எனக்கு அவசிய தேவைகள் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
அது அவர்களுக்கு தோனவே தோணாது. எனக்கு பாத்ரூம் வசதி இருக்காது அதை நானே கேட்ட பின்னர் மிக தாமதமாக உணர்ந்து ஏற்பாடு செய்து கொடுப்பாங்க கார் போயிட்டு இருக்கும் போது திடீரென பைபாஸ் ரோட்டில் நிறுத்தி மாண்டேஜ் ஷார்ட் எடுக்கலாம்..
கார்லயே டிரஸ் மாத்திட்டு வாங்கன்னு சொல்லுவாங்க அதுவும் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சிரமம் என்பதை புரிந்து கொள்ள மாட்டார்கள் நடிகைகள் என்றால் ரோபோவா நாங்களும் மற்ற பெண்களை போன்ற மனுஷிகள் தானே எங்களுக்கு கூச்ச உணர்வுகள் எல்லாம் இருக்காதா என கோபமாக பேசி உள்ளார்.