கவின் ‘டாடா’ இயக்குனருக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்.! வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..

kavin
kavin

தமிழ் சினிமாவில் சில காலங்களாக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் தான் கவின் அந்த வகையில் இவருடைய நடிப்பில் டாடா என்ற திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அபர்ணாதாஸ் நடித்திருந்த நிலையில் இவர்களை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

டாடா படத்தினை கணேஷ் பாபு இயக்கியிருந்தார் இந்த படம் வசூல் ரீதியாக நிச்சயமாக நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது டாடா பட இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதாவது கணேஷ் பாபு இயக்கம் இருக்கும் அடுத்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

எனவே இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை லைக்கா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீப காலங்களாக லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட் இருக்கும் திரைப்படங்களை உருவாக்கி வரும் நிலையில் இது போன்ற சிறிய பட்ஜெட் படத்தினையும் உருவாக்க இருக்கிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தினை தயாரித்திருந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘ஏகே 62’ திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து டாடா பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

டாடா படம் வெளியாகி ஒரே நாளில் இவ்வாறு லைக்கா நிறுவனம் கணேஷ் பாபு உடன் கைகோர்த்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இதற்கு முன்பு ரன் பேபி ரன் திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் ஜியன் கிருஷ்ணமூர்த்தி ஒரே வார்த்தில் அடுத்த படத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.