கவின் சின்னத்திரையில தான் மாசு. இங்க ஆட்டம் போட்டா அஸ்வின் கதி தான் உனக்கு. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

kavin-
kavin-

சின்னத்திரையில் 90s கிட்ஸ்களின் ஃபேவரட் சீரியல் ஆன கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். பின்பு கவினுக்கு ஒரு கட்டத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு வெள்ளித்திரையில் சில திரைப்படங்களும் வந்தன.

கவின் ஆரம்ப காலகட்டங்களில் பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து பின்பு நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கவின் நடிகை அமிர்தா ஐயருடன் இணைந்து நடித்த லிப்ட் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து கவின் இரண்டு மூன்று  திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித்தின் அடுத்த திரைப்படத்திலும் கவினுக்கு ஒரு சின்ன ரோல் இருப்பதாகவும் கூறப்படுகின்றன. இப்படி படிப்படியாக வளர்ந்து வரும் கவின் அவரது படத்தில் சில வேண்டாத தவறுகளை செய்து வருகிறாராம்.

கவின் நடிக்கும் படங்களில் சில நபர்களை அவர் வேண்டாம் இவர் வேண்டாம் அவரை மாற்றுங்கள் இவரை மாற்றுங்கள் என பல மாற்றங்களை செய்து வருகிறாராம். இதனால் படக் குழுவில் உள்ள மற்றவர்களும் இப்பதான் நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் உங்களுக்கு இதெல்லாம் தேவையா என பலரும் கூறி வருகின்றனர்.

நடிகர் கவினை போல வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் அஸ்வின் அவரும் இவர் போல தான் அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிகப் பிரசங்கித் தனமாக பேசி தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது நடிகர் கவினும் இதுபோல் செய்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேலும் நடிகர் அஸ்வின் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள் எனவும் பலரும் கவினுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.