தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்றால் கவினா..? ஆத்திரத்தில் விஜய் ரசிகர்கள்..!

kavin-1
kavin-1

தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து வகையான சினிமாக்களிலும் உள்ள நடிகர்களுக்கு ஒரு பட்டப்பெயர் இருக்கும் அந்த வகையில் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு பெயர்களை வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், இளையதளபதி, மக்கள் செல்வன், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார்,  தல என பல்வேறு பெயர்களை ரசிகர்கள் தங்களுடைய நடிகர்களுக்கு வைத்துள்ளார் அந்தவகையில் தல அஜித் மட்டும் தனக்கு எந்த விதமான பெயரும் வேண்டாம் என கூறியுள்ளாராம்.

அந்த வகையில் பிரபா நடிகர்களின்  பட்டப்பெயரை அவருடைய ரசிகர்கள் மற்றொரு நடிகருக்கு கொடுக்க சம்மதம் தெரிவிப்பதே கிடையாது. ஆனால் தற்போது இளைய தளபதி என்ற பெயரில் தற்போது ஒரு இளம் நடிகருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் அந்த நடிகரின் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்த ரசிகர் இளையதளபதி கவின் என்று ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அனைவரும் இளைய தளபதி என்பது அவர் மட்டுமே வேறு யாரும் கிடையாது என மிக கோபத்தில்  கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அவர் பெருமளவு வளர்வதற்கு ஒரு முக்கிய பங்கு வகித்தது. இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகர் கவின் அதன்பிறகு திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் போட்ட ட்வீட்  சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.