சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பின் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு நிகழ்ச்சிகளில் தலை காட்டி மேலும் தன்னை மக்கள் மத்தியில் காட்டிய கொண்டவர் நடிகர் கவின். 2011 ஆம் ஆண்டு வெளியான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி அதன்பின் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையன் ஆக நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
பிறகு வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கிடைத்தது அந்த வகையில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதனை தொடர்ந்து இவர் 2019ஆம் ஆண்டு நட்புனா என்னனு தெரியுமா என்னும் படத்தில் ஹீரோவாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார்.
இப்படி வெள்ளி திரையில் பயணித்தாலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையாமல் கிடைக்காமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை இவரும் பண்ணின விஷயம்தான் பிக் பாஸ் சீசன் 3 – ல் பேசும் பொருளாக மக்கள் மத்தியில் இருந்தது மேலும் இருவரும் காதலிக்கின்றனர் எனமக்கள் மற்றும் ரசிகர்கள் பேசினார்.
ஆனால் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு லாஸ்லியாவின் நீங்களும் இன்னும் காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது கூறப்பட்டது ஆனால் மீடியா உலகமும் கவின், லாஸ்லியாவின் எங்கு பார்த்தாலும் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு மாற்றி கேள்வியை மீடியா வழக்கமாக வைத்து வருகின்றனர். கவின் தற்பொழுது லிப்ட் திரைப்படம் சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தை வினித் வர பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கவின்னுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார் ஒரு ஐடி கம்பெனியில் பேய் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மிக சூப்பராக திகில் கலந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருந்தனர்.
படம் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படியிருக்க திடீரென பேட்டி ஒன்றை அளித்துள்ளார் கவின். அவரிடம் லாஸ்லியா குறித்து கேட்கப்பட்டது. லாஸ்லியா நடித்த friendship படத்தை நீங்கள் பார்த்தீர்களா என கேட்கப்பட்டது அதற்கு நான் பார்க்க வில்லை ஏனென்றால் அப்பொழுது நான் என்னுடைய பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். எங்களுக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் போன்கால் கூட எதுவும் இல்லை அவரவர் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறோம் என கூறிவிட்டார்