நடிகர் கௌதம் கார்த்திக் தன்னுடைய திருமணத்தை அப்பாவின் ஆசைக்கு ஏற்றவாறு செய்யாமல் அவர் ஆசையை நிராசையாக மாற்றியுள்ளார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகர் கார்த்திக் இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு ஒரு அங்கீகாரமும் கிடைத்தது.
அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திக் ரசிகர்களால் அன்புடன் நவரச நாயகன் என அழைக்கப்பட்டு வந்தார். இப்படி சினிமாவில் நடித்து வந்த நடிகர் கார்த்திக் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி வந்த கார்த்திக் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் கார்த்திக் தற்போது பிசியோதெரபி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் கடந்த வாரம் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய அந்த திருமணம் நடிகர் கார்த்திக்கு நிராசையாக இருப்பதாக தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது கார்த்திக் அவர்கள் தன்னுடைய மகன் திருமணத்தை சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், உறவினர்களுக்கும், தெரியப்படுத்தி கோலாலமாக நடத்த திட்டமிட்டு உள்ளாராம் ஆனால் கௌதம் கார்த்திக் வெறும் 250 பத்திரிகை மட்டும் அடித்து முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் திருமண பத்திரிகையை கொடுத்திருக்கிறாராம்.
அதுமட்டுமல்லாமல் இந்த முடிவை தனது தந்தையிடமும் கூறி இருக்கிறாராம் அத்துடன் அவருக்கு ஒரு பத்திரிகையும் கொடுத்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் நடிகர் கௌதம் கார்த்திக் குடும்ப முறைப்படி திருமணம் நடக்கவில்லையாம் அதற்குப் பதிலாக இவர்களுடைய திருமணம் கேரள முறைப்படி தான் நடந்ததாம். இதனாலேயே நவரச நாயகன் கார்த்திக் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.