தமிழ் சினிமாவில் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களை இயக்கி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது படங்களில் காதல் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் இருந்தாலும் பெரிதும் காதல் இருப்பதால் பெண் ரசிகர்கள் இவருக்கு ஏராளம்.
இதுவரை மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற பல்வேறு படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஏன் இப்பொழுது கூட நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற காதல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை வெளிவந்து மிரட்டிய நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான முறையில் எடுத்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக ஒரு நடிகருடன் கைகோர்க்கிறார். அந்த பிரபல நடிகர் யாருமல்ல தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின் ஹீரோவாக விஸ்வரூபமெடுத்து இப்பொழுது இயக்குனராக வெற்றி கொடியை நாட்டி வரும் ராகவா லாரன்ஸுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறாராம்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்து வெகுவிரைவிலேயே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.